×

தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்; இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்: டிம்பிள் யாதவ் எம்.பி., விமர்சனம்

டெல்லி: இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என டிம்பிள் யாதவ் எம்.பி., விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி டிம்பிள் யாதவ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; விவசாயிகள், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பற்றி மத்திய அரசு பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் அதே வேளையில், தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது. மத்திய பட்ஜெட்டில் ரயில்வேயும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் எனவும் கூறினார்.


Tags : Dimple Yadav , Budget presented keeping elections in mind; This is a budget that will disappoint the people: Dimple Yadav MP, reviews
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால்...